முல்லைத்தீவில் திடீரென எழுந்த ஒலியால் மக்கள் அச்சம்!

முல்லைத்தீவில் திடீரென எழுந்த ஒலியால் மக்கள் அச்சம்!

முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளதாக மக்கள் இன்று (29) பீதியடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சமிக்ஞைகள் பொருத்தப்பட்டுள்ளது.

அதிலிருந்து இன்று ஒலி எழுந்துள்ளது. அந்த ஒலி சமிக்ஞையை கேட்ட கடற்கரையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுனாமி பேரலை ஏற்பட்டுள்ளதாக அச்சமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவில் திடீரென எழுந்த ஒலியால் மக்கள் அச்சம்! | A Sudden Tsunami Was Heard In Mullaitivuஇதனையடுத்து, அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், வட்டுவாகல் கடற்படை தளத்தில் ஒத்திகை பயிற்சி செய்வதாகவும் அப்பயிற்சி வேளையிலேயே இந்த ஒலி எழுப்பப்பட்டுள்ளதாகவும் மக்கள் சுனாமி குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஏதாவது அனர்த்தம் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டால் நாம் முன்கூட்டியே அறிவுறுத்தல் வழங்குவோம் என்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் கூறியுள்ளனர்.