மனைவி கோடரியால் வெட்டி கொலை; கணவன் தப்பியோட்டம்

மனைவி கோடரியால் வெட்டி கொலை; கணவன் தப்பியோட்டம்

கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்ல கதிர்காமம் ரஜ மாவத்தை பிரதேசத்தில் ஒருவர் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் செல்ல கதிர்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

மனைவி கோடரியால் வெட்டி கொலை; கணவன் தப்பியோட்டம் | Wife Hacked To Death With Axe Husband Fleesகுடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளதாகவும், கொலையின் பின்னர் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தை அடுத்து சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளில் கதிர்காமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்