எச்சரிக்கை மீறி சென்ற தந்தை சடலமாக மீட்பு... நூலிழையில் உயிர்தப்பிய மகன்!

எச்சரிக்கை மீறி சென்ற தந்தை சடலமாக மீட்பு... நூலிழையில் உயிர்தப்பிய மகன்!

யான் ஓயா முகத்துவாரத்திற்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்ததில் நபரொருவர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

எச்சரிக்கை மீறி சென்ற தந்தை சடலமாக மீட்பு... நூலிழையில் உயிர்தப்பிய மகன்! | Yan Oya Father Died While Fishing Surviving Son

சீரற்ற காலநிலையிலும் எச்சரிக்கை மீறி நேற்றையதினம் (27-11-2024) யான் ஓயா முகத்துவாரத்திற்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தந்தை மற்றும் மகன் இருவரும் படகு கவிழ்ந்த நிலையில் தந்தை காணாமல் போனதுடன் மகன் தப்பித்து நீந்தி கரை சேர்ந்துள்ளார்.

இது தொடர்பாக விபத்தில் இருந்து தப்பிய காணாமல் போனவரின் மகன் முபாரக் ஜாகிர் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எச்சரிக்கை மீறி சென்ற தந்தை சடலமாக மீட்பு... நூலிழையில் உயிர்தப்பிய மகன்! | Yan Oya Father Died While Fishing Surviving Son

இதனையடுத்து காணாமல் போன நபர் புடவைகட்டு - சாகரபுர பகுதியில் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் புல்மோட்டை 01 இலுப்பையடி சந்தியைச் சேர்ந்த 56 வயதுடைய செய்லாப்தீன் முபாறக் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.