ஆபத்தாக மாறியுள்ள வட்டுவாகல் பாலம்; பயணிப்போர் அவதானம்

ஆபத்தாக மாறியுள்ள வட்டுவாகல் பாலம்; பயணிப்போர் அவதானம்

இலங்கையின் வடக்கு கிழக்கில் பெய்துவரும் கடும் மழை காரணமாக முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே நீர் குறுக்கறுத்துச் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது.

முல்லைத்தீவு - பரந்தன் ஏ35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் தொடர்ச்சியான மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி பாலம் வெளியே தெரியாதபடி காணப்படுகின்றது.

ஆபத்தாக மாறியுள்ள வட்டுவாகல் பாலம்; பயணிப்போர் அவதானம் | Vattuwagal Bridge Has Become Dangerous

இதனால் வட்டுவாகல், சாலை முகத்துவாரங்கள் வெட்டிவிடப்பட்ட நிலையில் வெள்ள நீர் வடிந்திருந்தது.

இந்நிலையில், மீண்டும் தொடர்ச்சியாக அடைமழை பெய்துவரும் கனமழை காரணமாக வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே நீர் குறுக்கறுத்து பாய்ந்த வண்ணம் இருக்கிறது.

ஆபத்தாக மாறியுள்ள வட்டுவாகல் பாலம்; பயணிப்போர் அவதானம் | Vattuwagal Bridge Has Become Dangerousஎனவே பாலத்தின் ஊடாக பொதுமக்கள் அவதானமாக பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஆபத்தாக மாறியுள்ள வட்டுவாகல் பாலம்; பயணிப்போர் அவதானம் | Vattuwagal Bridge Has Become Dangerous