மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட 200 மில்லியன் ரூபா பணம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவிப்பிரமாணத்திற்கு ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்படாத 200 மில்லியன் ரூபா பணம் மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே( T. G. Rathna Gamage) தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று(25.11.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி பதவிப் பிரமாணம் நிகழ்வுக்கு வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்
எனினும் தற்போது அந்த பணம் மக்கள் மயமாக்கப்பட்டுள்ளதாக ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
மேலும், தமது அரசாங்கத்தின் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு என ஒதுக்கப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தும் இனி மக்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.