கொழும்பில் இருந்து யாழ் சென்ற பேருந்து விபத்து; பெண் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து யாழ் சென்ற பேருந்து விபத்து; பெண் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இன்றைய தினம் (26) அதிகாலை இந்த விபத்து புனேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இதில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ் சென்ற பேருந்து விபத்து; பெண் உயிரிழப்பு | Bus Accident From Colombo To Jaffna Woman Diesதற்போது பெய்து வரும் மழை காரணமாக வீதியில் வழுக்கும் நிலைமை காணப்பட்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பில் இருந்து யாழ் சென்ற பேருந்து விபத்து; பெண் உயிரிழப்பு | Bus Accident From Colombo To Jaffna Woman Diesஉயிரிழந்த பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ் சென்ற பேருந்து விபத்து; பெண் உயிரிழப்பு | Bus Accident From Colombo To Jaffna Woman Dies

விபத்து சம்பவம் தொடர்பில் புனேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ,உயிரிழந்த பெண்ணின் விபரம் வெளியாகவில்லை.