2024 க.பொ.த உயர்தர பரீட்சையில் உதவி அதிபர்களுக்கு விதிக்கப்பட்ட தடை

2024 க.பொ.த உயர்தர பரீட்சையில் உதவி அதிபர்களுக்கு விதிக்கப்பட்ட தடை

க.பொ.த உயர்தர பரீட்சையின் போது கண்காணிப்பாளர்கள் மாத்திரமே பரீட்சை நிலையங்களில் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, உதவி அதிபர்கள் அல்லது ஊழியர்களுக்கு இம்முறை கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், உயர்தரப் பரீட்சைகள் திங்கட்கிழமை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

2024 க.பொ.த உயர்தர பரீட்சையில் உதவி அதிபர்களுக்கு விதிக்கப்பட்ட தடை | Mobile Phones Are Prohibited During Al Exams

முதல் ஆறு நாட்களுக்கான பரீட்சை வினாத்தாள் காவல்துறை பாதுகாப்புடன் பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இதன்படி, 2024 உயர்தர பரீட்சை 2,312 பரீட்சை நிலையங்களில் நாளையதினம் ஆரம்பித்து டிசம்பர் 20ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டு மொத்தம் 333,183 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.