இலங்கைக்கு கடனுதவியை அங்கீகரித்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கைக்கு கடனுதவியை அங்கீகரித்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கை அரசாங்கத்தின் நிதித்துறையை மேலும் வலுப்படுத்த உதவுவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்கை அடிப்படையிலான கடனை, தாம் அங்கீகரித்துள்ளதாக, ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார நிலைமைகளை உறுதிப்படுத்துவதிலும் நிதி நிலைமையை மேம்படுத்துவதிலும் இலங்கை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. 

இந்தநிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கி, தனது நிதித்துறையில் கட்டமைப்பு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி நிறுவனமயமாக்குவதன் மூலம் நாட்டை நீண்டகால வளர்ச்சியை நிலைநிறுத்த உதவுகிறது என்று வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்காபியூமி கடொனொ தெரிவித்துள்ளார்.

இந்த துணை கடன் திட்டம், பொருளாதார நெருக்கடி, பின்னடைவு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றிலிருந்து நிலையான மீட்சியை அடைவதற்கு வங்கித் துறையின் நிர்வாகத்தை வலுப்படுத்தும்.

அத்துடன், இலங்கையில் நிதி உள்ளடக்கத்தை விரிவுபடுத்தவும் உதவும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.