கொவிட்-19 அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து வருவோருக்கு ஜேர்மனி கட்டாய சோதனை!

கொவிட்-19 அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து வருவோருக்கு ஜேர்மனி கட்டாய சோதனை!

கொவிட்-19 அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் இருந்து திரும்பும் பயணிகளுக்கு, ஜேர்மனி கட்டாய சோதனைகளை நடத்தும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறுகையில், ‘எங்களிடம் முதல் வரைவுகள் உள்ளன. இதனை மாநிலங்களுடன் ஒருங்கிணைக்க நாங்கள் விரும்புகிறோம்.

ஏனெனில், அவர்கள் அதை விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் செயற்படுத்த வேண்டும்’ என கூறினார்.

சில ஐரோப்பிய நாடுகளை விட ஜேர்மனி தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

அதிக கொவிட்-19 தொற்று இருப்பதாக வெளியுறவு அமைச்சகம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடக்கு ஸ்பெயினில் உள்ள அரகோன், கட்டலோனியா மற்றும் நவர்ரா ஆகிய பிராந்தியங்களை அறிக்கையிட்டமை குறிப்பிடத்தக்கது.

அங்கு 210,402பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 9,148பேர் உயிரிழந்துள்ளதாக,ஜேர்மனியின் நோய் மற்றும் கட்டுப்பாட்டு தடுப்பு நிறுவனமான ரோபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது