நாட்டில் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் இன்று வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டில் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை | Rain In Many Places In The Country Warning People

மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.