கலேவெல சிறுவன் கொலை- சந்தேக நபருக்கு விளக்கமறியல்
கலேவெல பிரசேத்தில் 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பின்னர் கொலை செய்த குற்றச்சாட்டின் பிரதான சந்தேக நபர் நாளை (04) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை நேற்று (02) தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே அவரை நாளை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதன்போது குறித்த சந்தேக நபரை மனநல மருத்துவரிடம் அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
59 வயதுடைய குறித்த சந்தேக நபர் கலேவெல-பத்கோலகொல்ல பிரதேசத்தில் வசித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.