தேர்தல் முடிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவது குறித்து வெளியான அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், ஜனாதிபதியின் வாக்களிப்பு தொடர்பான செய்திகள் மற்றும் படங்களை பிற்பகல் நான்கு மணிக்குப் பின்னரே ஊடகங்களில் வெளியிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளுக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பத்தாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
மேலும், 22 தேர்தல் மாவட்டங்களில் இன்று (14) காலை ஏழு மணிமுதல் பிற்பகல் நான்கு மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.