இலங்கை மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள இறுதி அறிவிப்பு!
நாட்டில் மது உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட வரிக் காலகட்டத்தில் நிலுவைத் தொகையைச் செலுத்தாதது தொடர்பாகவும், அனைத்து நிலுவைத் தொகையையும் இம்மாதம் 30ஆம் திகதிக்குள் செலுத்துமாறு இலங்கை மதுவரி திணைக்களம் இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கை மதுவரி திணைக்களத்தின் கூற்றுப்படி,
சுமார் 10 நிறுவனங்கள் வரி நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டியுள்ளதாகவும், 8.5 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் செலுத்த வேண்டிய பணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால், அந்த நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.