ஆப்பிளை பின்தள்ளிய உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் எது தெரியுமா !

ஆப்பிளை பின்தள்ளிய உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் எது தெரியுமா !

உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் சாதனையை என்விடியா (Nvidia) நிறுவனம் முறியடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.38 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததே உலக சாதனையாக இருந்தது.

இந்த சாதனையை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ள நிலையில் என்விடியா நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.43 டிரில்லியன் அமெரிக்க (America) டொலராக உயர்ந்துள்ளது.  

2022 ஆம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி என்ற புதிய வசதி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

ஆப்பிளை பின்தள்ளிய உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் எது தெரியுமா ! | Most Valuable Richest Company In The World 2024இந்த பரிசோதனையில் அங்கம் வகித்த என்விடியா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அன்று முதல் தற்போது வரை 850 விழுக்காடு உயர்ந்துள்ளது

மேலும், கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க பங்குச்சந்தையில் என்விடியா நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 139 புள்ளி 93 டொலர்களாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.