சீனிக்கான விசேட பண்ட வரி நீடிப்பு

சீனிக்கான விசேட பண்ட வரி நீடிப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு 50 ரூபா விசேட வர்த்தக பண்ட வரி விதிக்கப்பட்டது.

சீனிக்கான விசேட பண்ட வரி நீடிப்பு | Extension Of Excise Duty On Sugar

அதன் செல்லுபடியாகும் காலம் நவம்பர் 1 ஆம் திகதி முடிவடைய இருந்த நிலையில் அரசாங்கம் குறித்த விசேட வர்த்தக பண்ட வரியை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பதாக கூறியுள்ள போதிலும், அந்த வரிகளை அறவிடும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாக மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.