130 ஆண்டுகளில் முதன்முறை : அச்சத்தில் ஜப்பான் மக்கள்
130 ஆண்டு கால வரலாற்றில் ஜப்பானில்(japan) உள்ள பூஜி (Fuji )மலை சிகரத்தில் உள்ள பனி முழுவதுமாக உருகியுள்ளதால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
ஜப்பானின் கண்கவரும் இயற்கை அழகுகளில் ஒன்றாக இருப்பது ஃபூஜி மலை சிகரம். சுமார் 12,460 அடி உயரம் கொண்ட ஃபூஜி சிகரமானது ஜப்பானின் மிக உயரமான சிகரம் மட்டுமல்லாது, ஜப்பானின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
இது உயரமான மலைச்சிகரம் மட்டுமல்ல உறக்கத்தில் இருக்கும் பெரிய எரிமலையும் ஆகும்.
இந்த ஃபூஜி சிகரத்தின் உச்சியில் எப்போதுமே பனி சூழ்ந்து காணப்படும். ஆனால் அண்மைக்காலமாக ஜப்பானின் வழக்கத்தை விட அதிகமாக வெப்பநிலை உயர்ந்த நிலையில், இந்த ஆண்டு வரலாறு காணாத விதமாக ஃபூஜியின் பனி மொத்தமாக உருகியுள்ளது.
130 ஆண்டுகளில் ஃபூஜியின் பனி உருகுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
உறங்கும் நிலையில் உள்ள ஃபூஜி எரிமலையின் பனி மொத்தமாக உருகியுள்ளதை அந்நாட்டு மக்கள் அச்சத்துடன் பார்க்கின்றனர்.