வெளிநாட்டில் தந்தை, சகோதரி... யாழில் திடீரென உயிரிழந்த இளைஞன்! அதிர்ச்சி காரணம்

வெளிநாட்டில் தந்தை, சகோதரி... யாழில் திடீரென உயிரிழந்த இளைஞன்! அதிர்ச்சி காரணம்

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் பாவித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு (31-10-2024) உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டில் தந்தை, சகோதரி... யாழில் திடீரென உயிரிழந்த இளைஞன்! அதிர்ச்சி காரணம் | Youth Consumed Too Many Drugs Died In Jaffnaசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹெரோயின் போதைக்கு அடிமையான குறித்த இளைஞன், முன்னர் ஊசி மூலம் போதையேற்றி வந்துள்ளார்.

இருப்பினும், பின்னர் திருந்தி வாழ்ந்து வந்த நிலையில், நேற்று நண்பர்களுடன் ஹெரோயின் போதைப்பொருள் பாவித்துள்ளார்.

வெளிநாட்டில் தந்தை, சகோதரி... யாழில் திடீரென உயிரிழந்த இளைஞன்! அதிர்ச்சி காரணம் | Youth Consumed Too Many Drugs Died In Jaffna

அதிகளவான ஹெரோயின் உட்கொண்ட நிலையில், வாயில் இருந்து நுரைதள்ளிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் தாய் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தந்தையும் சகோதரியும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.