கோழி இறைச்சி விலை தொடர்பில் வெளியான தகவல்

கோழி இறைச்சி விலை தொடர்பில் வெளியான தகவல்

பன்றி காய்ச்சல் என்ற போர்வையில் எதிர்வரும் பண்டிகை காலங்களில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று நுகர்வோர் அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பன்றிக்காய்ச்சல் தொற்றினை காரணமாக வைத்து கோழி இறைச்சி மாபியாவொன்று இயங்கி வருவதாக நுகர்வோர் அதிகார சபையின் தவிசாளர் ஹேமந்த சமரகோன் நேற்று (30) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சில கோழிப்பண்ணை உரிமையாளர்கள் விலையை உயர்த்துவதற்காக கோழி இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஏற்கனவே கோழி இறைச்சியின் விலை ஆயிரம் ரூபாவில் இருந்து படிப்படியாக அதிகரித்து சென்றுள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கோழி இறைச்சி விலை தொடர்பில் வெளியான தகவல் | Efforts To Increase The Price Of Chicken Meatஇதன்படி, கோழி இறைச்சியின் விலையை அதிகரித்து நுகர்வோர் சுரண்டப்படுவதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட கோழி பண்ணை சங்க பிரதிநிதிகள் குழுவொன்று நாளை (01) நுகர்வோர் அதிகார சபைக்கு அழைக்கப்படும் என ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.