பலாங்கொடை - கதிர்காம வீதியில் பேருந்து விபத்து: 14 பேர் வரை வைத்தியசாலையில்

பலாங்கொடை - கதிர்காம வீதியில் பேருந்து விபத்து: 14 பேர் வரை வைத்தியசாலையில்

பலாங்கொடை - கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 பேர் வரை காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்துச் சம்பவம்  இன்று(31.10.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது

இதன்போது, ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பெண்கள் பயணித்த பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 14 பெண்கள் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.