வாகன விபத்தில் 17 வயது இளைஞன் பலி

வாகன விபத்தில் 17 வயது இளைஞன் பலி

ராகம, தேவத்த தம்புவ சந்தி கிளை வீதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

தேவத்தையில் இருந்து தம்புவ சந்தி திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை, சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி, மின்கம்பத்தில் மோதியதில் விபத்து நேர்நதுள்ளது.

கந்தலியத்தபாலுவ, ராகம பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாகன விபத்தில் 17 வயது இளைஞன் பலி | Car Accident 17 Year Old Boy Diesஇந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, விபத்து தொடர்பில் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.