முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ஒருவர் சடலமாக மீட்பு! கொலையா

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ஒருவர் சடலமாக மீட்பு! கொலையா

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலமானது இன்றையதினம் (20-10-2024) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ஒருவர் சடலமாக மீட்பு! கொலையா? | Lohan Ratwatte S Private Secretary Was Killed

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், சடலத்திற்கு அருகில் துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை பொலிஸார் இன்னும் கண்டறியவில்லை.  

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ஒருவர் சடலமாக மீட்பு! கொலையா? | Lohan Ratwatte S Private Secretary Was Killed

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய 49 வயதான கட்டுகஸ்தோட்டை வெரல்லகம பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.