விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மன்னாரில் மோட்டார் சைக்கிள் - துவிச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காவல்பட்டாங்கட்டி, புதுக்குடியிருப்பு, பேசாலை பகுதியைச் சேர்ந்த துரைசாமி கணபதி (வயது 74) என்பவரே இவ்வாறு நேற்றையதினம் (16.10.2024) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த 2ஆம் திகதி பேசாலை - மன்னார் வீதியால் தனது வீட்டை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். இதன் போது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் அவர் மன்னார் - பேசாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பின்னர் 03ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Elder Man Died In An Accident In Mannarஇந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Elder Man Died In An Accident In Mannar

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.