வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் நாளையும் வெளியீடு

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் நாளையும் வெளியீடு

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் (15) நாளையும் (16) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை அனைத்து மாவட்டங்களின் விருப்பு எண்களையும் தேர்தல் ஆணைக்குழு பெற்றுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

விருப்பு எண்களை ஆய்வு செய்த பின், குறித்த ஆவணங்கள் மீண்டும் மாவட்ட செயலாளர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன்படி, இன்றும் (15) நாளையும் விருப்பு எண்களை வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் நாளையும் வெளியீடு | Candidates Preferenc Number Release Today Tomorrow

இதேவேளை, அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட உள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் வேட்பாளர் ஒருவர் செலவிட வேண்டிய பணத்தின் அளவு குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட உள்ளது.