போலி இலக்கத் தகடுகளுடன் சொகுசு வாகனம்....! பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மைத்துனர்

போலி இலக்கத் தகடுகளுடன் சொகுசு வாகனம்....! பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மைத்துனர்

மேல் மாகாண முன்னாள் அமைச்சர் ஒருவரின் மைத்துனரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ஏழு கோடி ரூபா பெறுமதியான போலி இலக்கத் தகடு கொண்ட சொகுசு வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லுணுகல பிரதேசத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையமொன்றை சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பதுளை குற்றப்புலனாய்வு பிரிவின் (Criminal Investigation Department) அதிகாரிகளால் குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சொகுசு வாகனத்தில் யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான காரின் பதிவு இலக்கம் இணைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போலி இலக்கத் தகடுகளுடன் சொகுசு வாகனம்....! பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மைத்துனர் | Luxury Jeep Used By The Former Minister Brother

பதுளை (Badulla) மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் சுஜித் வெதமுல்லவிற்கு (Sujith Vetamulla) கிடைத்த தகவலுக்கு அமைய, பதுளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி பிரதம காவல்துறை பரிசோதகர் ஜானக உள்ளிட்ட காவல்துறை குழுவினர் வாகனத்தை கண்டுபிடித்துள்ளனர்.

கைபற்றப்பட்ட வாகனம் காவல்துறையின் காவலில் எடுக்கப்பட்ட சொகுசு வாகனம் எனவும் முன்னாள் அமைச்சரின் மைத்துனரால் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) அரசாங்கத்தின் காலப்பகுதியில் அவரது மகன் யோஷித ராஜபக்ச (Yoshida Rajapaksa), 'எவன்ட்கார்ட்' உரிமையாளர் நிஷ்ஷங்க சேனாதிபதி (Nishshanka Senadipati), முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ (Johnston Fernando) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 1500 பேருக்கு 1690 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலி இலக்கத் தகடுகளுடன் சொகுசு வாகனம்....! பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மைத்துனர் | Luxury Jeep Used By The Former Minister Brother

அதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவுக்கு 8 துப்பாக்கிகளும், நிஷ்ஷங்க சேனாதிபதிக்கு 9 துப்பாக்கிகளும், யோஷித ராஜபக்சவுக்கும் 7 துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றின் மொத்த எண்ணிக்கை 24 ஆகும். mm9 ரக 16 துப்பாக்கிகளும் அதில் உள்ளடங்குகின்றன. இந்த துப்பாக்கிகளை விரைவில் பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் மீள வழங்கவில்லையெனில் 1916ஆண்டு 33 இலக்க துப்பாக்கி கட்டளை சட்டத்திற்கமைய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

போலி இலக்கத் தகடுகளுடன் சொகுசு வாகனம்....! பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மைத்துனர் | Luxury Jeep Used By The Former Minister Brother

துப்பாக்கிகளுக்கு சொந்தமான ரவைகளை கடற்படைக்குச் சொந்தமான வெலிசறையில் அமைந்துள்ள களஞ்சியசாலைக்கு குறித்த தினத்திகு முன்னர் வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தினால் துப்பாக்கிகள் வழங்கப்பட்டவர்களில் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித ராஜபக்சவும் ஒருவர். அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளின் எண்ணிக்கை 7 ஆகும்.