ஆசிரியைக்கு எமனான மின்சாரம்
மின்சாரம் தாக்கி ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெலியத்தை, தெத்துவாவெல தம்பேஆர பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 74 வயதுடைய திருமணமாகாத ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியை ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆசிரியை தனது காணிக்குச் சென்று மீண்டும் வீடு நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது மற்றுமொரு காணியில் பன்றிகளை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.