யாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த முன்னாள் கடற்புலிப் போராளி ஒருவர்!
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தில் வடமராட்சிக் கிழக்கு வத்திராயனைப் பிறப்பிடமாகவும் மாமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் கடற்புலிப் போராளி புரட்சி என்று அழைக்கப்படும் தாசன் எனபவரே உயிரிழந்தவர் ஆவார்.
கடந்த 04/10/2024 திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.