இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கப்படும் அபாயம்

இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கப்படும் அபாயம்

 

பெரிய மற்றும் நடுத்தர அளவிலான வரி செலுத்தாதவர்கள் தொடர்பில், இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.

பெரிய வரி செலுத்துவோர் மற்றும் நடுத்தர வணிகங்கள் என்பன, 2024 ஒக்டோபர் 25ஆம் திகதிக்குள் 100 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளன.

இந்த தொகையை செலுத்த வேண்டியவர்கள் டிசம்பர் 25ஆம் திகதி வரை நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தத் தொகையை மீட்டெடுத்தால், திணைக்களத்தின் இந்த ஆண்டின் வருமான இலக்கான 2024 பில்லியன் ரூபாய்களை அடையமுடியும் சந்திரசேகர கூறியுள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கப்படும் அபாயம் | 300 Billion Rupees Of Assets Are At Risk

இந்த காலக்கெடுவை நீடிக்க முடியாது என்றும், கடனை செலுத்தத் தவறினால், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் மற்றும் அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.