யாழ். மத்திய கல்லூரியின் பெற்றோர்களினால் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு

யாழ். மத்திய கல்லூரியின் பெற்றோர்களினால் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு

யாழ்ப்பாணம் (Jaffna) மத்திய கல்லூரியின் பெற்றோர்களினால் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கான (Anura Kumara Dissanayake) மனுவொன்று வடக்கு ஆளுநரிடம் கையளிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் நேற்று (04) தந்தை செல்வா மண்டபத்தில் அனைத்துப் பெற்றோர்களுக்கான விசேட பொதுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் தரத்தினை இலங்கை கல்வி நிர்வாக சேவைத் தரமாக உயர்த்துவதற்கும் (SLEAS), பதில் அதிபர் சி. இந்திரகுமாரை (SLEAS) நிரந்தரமாக்கித் தருமாறும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு பெற்றோர்களால் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, குறித்த கோரிக்கை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்காக, வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனிடம் எதிர்வரும் 07 ஆம் திகதி (திங்கட்கிழமை) 09.30 பிரதிநிதிகளால் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

யாழ். மத்திய கல்லூரியின் பெற்றோர்களினால் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு | Letter To President Parents Jaffna Central College