சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கை எதிர்நோக்கக் கூடிய பாதிப்புக்கள் மற்றும் நிச்சயமற்ற நிலைமைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜுலி கொஸாக் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

வொஷிங்டனில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.  

கடந்த ஜூன் மாதம் 12ம் திகதி இரண்டாம் மீளாய்வின் போது பொருளாதார கொள்கைகளை நடைமுறைபடுத்துவதற்காக 336 மில்லியன் டொலர்கள் கடன் வழங்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விடுத்துள்ள எச்சரிக்கை! | Imf Warns Of Uncertainties Lankaபணவீக்கத்தை குறைத்தல், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தல், கையிருப்புக்களை அதிகரித்தல், வருமானத்தை அதிகரித்தல் போன்ற பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது போன்று பாதிப்புக்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் தொடர்ந்தும் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விடுத்துள்ள எச்சரிக்கை! | Imf Warns Of Uncertainties Lankaகுறிப்பாக உறுதியளிக்கப்பட்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் வேகத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பிலான மூன்றாவது மீளாய்வுக்கான திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.