ஜனாதிபதி அனுரவின் முதல் வெளிநாட்டு பயணம்; வெளியான தகவல்!

ஜனாதிபதி அனுரவின் முதல் வெளிநாட்டு பயணம்; வெளியான தகவல்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (04) நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில் ஜனாதிபதி அனுர குமார இந்தியாவுக்கு செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்திய வெளிவிவகார அமைச்சர் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை புதுடில்லிக்கு மேற்கொள்ளவார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி அனுரவின் முதல் வெளிநாட்டு பயணம்; வெளியான தகவல்! | President Anura S First Foreign Trip

அங்கு ஜ்னாதிபதி அனுர , இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திக்கும் முதலாவது உயர்மட்ட வெளிநாட்டு பிரமுகர் ஜெய்சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (4) காலை இலங்கை வந்தடைந்தார். ​

அவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமரை சந்தித்து இந்திய வௌிவிவகார அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி அனுரவின் முதல் வெளிநாட்டு பயணம்; வெளியான தகவல்! | President Anura S First Foreign Tripஅதேசமயம் இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றதன் பின்னர் இந்திய அமைச்சர் ஒருவர் இலங்கை வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.