கொலையில் முடிந்த மதுபோதை; 33 வயது சந்தேகநபர் கைது

கொலையில் முடிந்த மதுபோதை; 33 வயது சந்தேகநபர் கைது

ரம்புக்கனை - கப்பல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மது அருந்திக்கொண்டிருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தார்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஒருவர் மற்றைய நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ள நிலையில், தாக்குதலுக்கு இலக்கானவர் ஆபத்தான நிலையில் தலம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளார்.

கொலையில் முடிந்த மதுபோதை; 33 வயது சந்தேகநபர் கைது | Alcoholism Resulting In Murderஉயிரிழந்தவர் கொத்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். மது அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் கப்பல - கொட்டவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதோடு கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.