குழந்தைகளுக்கு முகக்கவசம் அணியுங்கள்: பொதுமக்களிடம் சுகாதாரத்துறை கோரிக்கை

குழந்தைகளுக்கு முகக்கவசம் அணியுங்கள்: பொதுமக்களிடம் சுகாதாரத்துறை கோரிக்கை

குழந்தைகளுக்கு முகக்கவசத்தை அணிவிக்குமாறு பெற்றோரை சுகாதாரத் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் இன்ஃப்ளூயன்ஸா நோய் அறிகுறிகள் உள்ள குழந்தைள் இந்த நாட்களில் அதிகம் பதிவாகி வருவதால் இக் கோரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல்களை குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கை, கால் மற்றும் வாய் நோய் இந்த நாட்களில் குழந்தைகளுக்கு பரவி வருவதாகவும்  தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.குழந்தைகளுக்கு முகக்கவசம் அணியுங்கள்: பொதுமக்களிடம் சுகாதாரத்துறை கோரிக்கை | Important Announcement From Health Dept

எனவே சரியான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளை பாதுகாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவுவதால், கடுமையான தொண்டை புண் மற்றும் காய்ச்சலைக் காணலாம்.

எனவே எப்போதும் முகமூடிகளை அணிவது மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.