யாழில் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை
யாழ்ப்பாணம் (jaffna) உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (4.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், தென் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் ஓரளவு மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோரியுள்ளது.