பாடசாலை மாணவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்

பாடசாலை மாணவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்

பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளின் விலைகளை விரைவில் குறைக்க காலணி மற்றும் தோல் பொருட்கள் தொழில்துறையினர் சங்கம் தீர்மானித்துள்ளது.

காலணி மற்றும் தோல் பொருட்கள் தொழில்துறையினர் சங்கத்தின் தலைவர் புத்திக விமலசிறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அரசாங்கமொன்று பதவிக்கு வந்ததும் பல விடயங்களை எதிர்பார்க்கும்.

இந்த சமூகத்தில் நாட்டின் தொழில்துறையினரும் வடிவமைப்பாளர்களும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவேண்டியது அவசியம்.

பாடசாலை மாணவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல் | School Shoe Price Hike Expected Soon

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்வதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யவேண்டும்.” என்றார்.