இலங்கையில் நேர்ந்த மோசடி ; வீட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய நபர் கைது

இலங்கையில் நேர்ந்த மோசடி ; வீட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய நபர் கைது

நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்த தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (01) வீடு ஒன்றை உடைத்து மூன்று அரை பவுண் தங்கப் நகைகளைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்திலேயே, இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இலங்கையில் நேர்ந்த மோசடி ; வீட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய நபர் கைது | Man Arrested House And Stealing Gold Jewellery

வீட்டு உரிமையாளர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நுவரெலியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயுடன் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பின்னர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் பிரவேசித்த பொலிஸ் குழுவினர் 30 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ததுடன், அவரிடம் நடத்திய விசாரணையில், அவரிடம் இருந்து திருடப்பட்ட தங்க நகைகளையும் கைபற்றியுள்ளனர்.

இலங்கையில் நேர்ந்த மோசடி ; வீட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய நபர் கைது | Man Arrested House And Stealing Gold Jewellery

சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி ஆறு இலட்சத்திற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (03) முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.