சகோதரிக்காக பொது மக்களின் பணத்தில் சொகுசு மாளிகை நிர்மாணித்த அரசியல்வாதி

சகோதரிக்காக பொது மக்களின் பணத்தில் சொகுசு மாளிகை நிர்மாணித்த அரசியல்வாதி

மாத்தளை மாவட்டத்தின் உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது சகோதரி, முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஆகியோர் தற்போது இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத்தினால் பொது நிதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வணிக வளாக கட்டடத்திற்கு எவ்வித விலை மனுக்கோரலுமின்றி, முன்னாள் தலைவர் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் தனது சகோதரிக்கு கடை அறைகளை வழங்கியதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் தலைவரின் நிர்வாகத்தில் இடம்பெற்ற பல ஊழல் மோசடிகள் மற்றும் முன்னாள் தலைவர் கண்டி பிரதேசத்தில் மாளிகை போன்ற பாரிய வீடொன்றை நிர்மாணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், இன்னும் சில வாரங்களில் நீதிமன்றில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு, முன்னாள் தலைவர் மற்றும் அவரது சகோதரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சகோதரிக்காக பொது மக்களின் பணத்தில் சொகுசு மாளிகை நிர்மாணித்த அரசியல்வாதி | Politicians Bribery Money In Sri Lanka Rich House