வருங்கால மனைவியின் தந்தையை கொடூரமாக கொலை செய்த மாப்பிள்ளை!

வருங்கால மனைவியின் தந்தையை கொடூரமாக கொலை செய்த மாப்பிள்ளை!

கம்பஹா மாவட்டம் வெயங்கொட, கெமுனு மாவத்தை, பத்தலகெதர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் மண்வெட்டியால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (30-09-2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் பத்தலகெதர, வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த நபரின் மகளை திருமணம் செய்யவிருந்த மாப்பிள்ளையால் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

வருங்கால மனைவியின் தந்தையை கொடூரமாக கொலை செய்த மாப்பிள்ளை! | Groom Killed His Wife S Father Veyangoda Gampaha

கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரும் மோதலில் காயமடைந்து பொலிஸ் பாதுகாப்பில் வத்துபிட்டியல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெயாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.