கிளிநொச்சி மதுபானசாலை விவகாரம்; சிக்கினார் விக்னேஸ்வரன்!

கிளிநொச்சி மதுபானசாலை விவகாரம்; சிக்கினார் விக்னேஸ்வரன்!

 கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானச்சாலைக்கு தானே சிபாரிசுக்கடிதம் வழங்கியதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அரசினால் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானச்சாலை உரிமம் வழங்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சி மதுபானசாலை விவகாரம்; சிக்கினார் விக்னேஸ்வரன்! | Kilinochchi Bar Affair Vigneswaran Caughtஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப் போட ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் ரணில் அரசில் பல தமிழ் எம்.பிக்களும் மதுபானச்சாலை உரிமம் பெற்றதாக தகவல் வெளியானது. இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈ.பி.டி.பி. ரெலோ உள்ளிட்ட கட்சிகள் மீது குற்றம்சுமத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக விக்னேஸ்வரனின் பெயரும் இதில் பேசப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் எனது மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர், கிளிநொச்சியில் மதுபானச்சாலை அமைக்க பெண்ணொருவர் சிபாரிசு கடிதம் கேட்டார்.

அதற்கான சிபாரிசு கடிதம் வழங்கினேன். அவ்வளவுதான். அதற்கு பின்னர் என்ன நடந்ததென எனக்கு தெரியாது என விக்கினேஸ்வரன் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.