எரிபொருள் விலை குறைப்பு: ஜனாதிபதியிடம் வலியுறுத்திய முன்னாள் அமைச்சர்

எரிபொருள் விலை குறைப்பு: ஜனாதிபதியிடம் வலியுறுத்திய முன்னாள் அமைச்சர்

எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மீதான வரியை நீக்குவோம் என தேர்தல் பேரணிகளில் தெரிவித்ததற்கு அமைய சுமார் ஒரு லீற்றருக்கு 150 ரூபா குறைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சட்ட விதிகளின்படி, 30ம் திகதி இரவுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் அவர்கள் வாக்குறுதி அளித்தபடி எரிபொருள் மீதான வரிகளை நீக்கினால், ஒரு லீற்றர் டீசல் 100 ரூபா என அவர் மேலும் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை குறைப்பு: ஜனாதிபதியிடம் வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் | Sri Lanka Fuel Price Revision In Octoberஅத்துடன் ஜனாதிபதி தேர்தலை கருத்திற்கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்ட கடந்த அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை, தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு முன்னாள் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒக்டோபர் மாதத்துக்கான மின்சார விலை திருத்தம் திட்டமிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலை குறைப்பு: ஜனாதிபதியிடம் வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் | Sri Lanka Fuel Price Revision In Octoberஇந்த நிலையில் அதனை தாமதமின்றி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) ஒப்புதலுக்கு அனுப்புமாறு அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.