
உயர்தர பரீட்சையின் பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஒத்திவைப்பு
ஒக்டொபர் 12 ஆம் திகதி நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை (GIT) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்தை அறிவிப்பை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) வெளியிட்டுள்ளது.
அதன் படி, ஒத்திவைக்கப்பட்டுள்ள குறித்த பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த அறிவிப்பை உயர்தர பரீட்சைக்கு தோற்றிவிருக்கும் மாணவர்களுக்கு தெரியபடுத்துமாறும் அதிபர்களை பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், பரீட்சை மண்டபங்களை ஒதுக்கீடு செய்வதற்காக பரீட்சைகளுக்குப் பொறுப்பான மாகாண/பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தகவல்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த தகவல்களை உறுதி செய்து கொள்வதற்கான அறிவுரைகள் மாணவர்களுக்கு பாடசாலையினால் வழங்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.