மனைவி நீச்சல் உடையில் குளிக்க தனித்தீவையே வாங்கிய கணவன்! எத்தனை கோடி தெரியுமா
துபாயை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜமால் அல்நடக் இவரது மனைவி சவுதி அல்நடக் நீச்சல் உடையில் குளிப்பதற்காக ஆசைப்பட்ட நிலையில் அவருக்காக கணவர் ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார்.
இதுதொடர்பாக சவுதி அல்நடக் அந்த தனியார் தீவின் காணொளியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தீவின் சரியான இருப்பிடத்தை வெளியிட சவுதிஅல்நடக் மறுத்து விட்டடார்.
எனினும் தனக்காக தனது கணவர் ஜமால் அல்நடக் தீவை வாங்குவதற்காக 50 மில்லியன் டொலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 418 கோடி) செலவிட்டதாக கூறியுள்ளார்.
இது தொடர்பில் சவுதிஅல்நடக் கூறுகையில்,
எனது கணவர் வாங்கிய தீவு ஆசியாவில் உள்ளது. தனியுரிமை காரணங்களுக்காக நாங்கள் தீவின் சரியான இடத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்றார்.
ஏற்கனவே சவுதிஅல்நடக் தனது ஆடம்பர வாழ்க்கை தொடர்பான காணொளிகளை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தவர் ஆவார்.