புதிய அரசாங்கத்தில் கடவுச்சீட்டு பிரச்சினைக்கும் தீர்வு

புதிய அரசாங்கத்தில் கடவுச்சீட்டு பிரச்சினைக்கும் தீர்வு

தற்போது நிலவும் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடியதாக அமைச்சர் ஊடகங்களுக்கு இன்றையதினம் (25) குறிப்பிட்டுள்ளார்.

அதன் போது, ஒக்டோபர் 15 ஆம் திகதி 20 திகதிக்கும் இடையில் அரசாங்கத்தினால் புதிய கடவுச்சீட்டுக்களை வழங்க முடியும் என பணிப்பாளர் தெரிவித்தாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதன் படி, இந்த காலக்கெடுவில் குறித்த இலக்கை அடைய எதிர்பார்ப்பதோடு, வரிசைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தில் கடவுச்சீட்டு பிரச்சினைக்கும் தீர்வு | Resolution Of Passport Issue In New Govt