ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) முக்கிய அறிவித்தலை விடுத்துள்ளது.

அதாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவிடம் தமது பிரசார செலவுப் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள் அது தொடர்பான அறிக்கையை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு 38 வேட்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Important Update For Election Candidates 2024தேர்தல் ஆணையத்திடம் அறிக்கைகள் வழங்கப்பட்ட பிறகு, அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும், தவறான செலவு அறிக்கைகள் இருந்தால், சரிபார்க்கக்கூடிய ஆவணங்களுடன் காவல்துறையில் யார் வேண்டுமானாலும் முறைப்பாடு செய்யலாம்.

வாக்காளர் ஒருவருக்கு செலவிடும் தொகை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு வாக்காளர் ஒருவருக்கு செலவிடும் தொகை 109 ரூபா என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, (17,140,354) வாக்காளர்களுக்கு ஒரு வேட்பாளர் பிரசாரச் செலவுக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச வரம்பு 186 கோடி ரூபாய் ஆகும்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Important Update For Election Candidates 2024

அந்த தொகையில் 60 சதவீதம் அதாவது 112 கோடி ரூபாயை வேட்பாளரால் பிரசாரச் செலவுகளாகவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் பிரசாரச் செலவாகச் செலவிடக்கூடிய தொகை 40 சதவீதமாகவும் இருக்குமென” தெரிவித்துள்ளார்.