சீரான வானிலை நிலவும்! வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

சீரான வானிலை நிலவும்! வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம், திருகோணமலை,யாழ்ப்பாணம்,மன்னார் போன்ற பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி, கண்டி,நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் அடிக்கடி மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரான வானிலை நிலவும்! வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு | Climate Change Alert In Sri Lanka

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.