இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது தொடர்ச்சியாக மீண்டும் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இன்றைய (24) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 801,464 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை | Today Gold Price In Srilanka For Peoples

24 கரட் தங்க கிராம் 28,280 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 226,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 25,930 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 207,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,750 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 198,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.