இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

இஸ்ரேலிய இலக்குகள் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்கள் நடத்திய ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்கள் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெற்கு லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபா, கலிலி, கோலன் மற்றும் நாசரேத் ஆகிய இடங்களில் வான்வழி ஊடாக பல ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

வறண்ட வனப்பகுதிகளில் குண்டுகள் விழுவதால் அந்தந்த பகுதிகளில் தீ பரவ ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு அவ்வப்போது மேற்கொள்ளப்படும் இந்த தாக்குதல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு சத்தம் எழுப்பப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், ​​இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான வீடுகளுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.