அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்தல் நிறுத்தப்படும்! தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்தல் நிறுத்தப்படும்! தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்த்தல் முடிவுகள் அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது வாக்களிப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாக இருந்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை சூனியமாக்கப்படும்.

அந்தத் தொகுதிகளில் மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும் வரையில் நாடாளவிய ரீதியிலான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பன்றி சுமுகமான முறையில் தேர்தலை நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்தல் நிறுத்தப்படும்! தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை | Sri Lanka Presidential Election 2024 Update

தேர்தல் நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.  

வாக்கு உங்கள் உரிமை, அதனை நாட்டு மக்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்தல் நிறுத்தப்படும்! தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை | Sri Lanka Presidential Election 2024 Update

தேர்தல் காலத்தில் சட்டத்தை கடுமையாக செயற்படுத்துமாறு அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், எந்தவொரு அவசர நிலைமையின் போதும் அழைப்பதற்காக முப்படையினரும் தயாராக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.