மனைவிக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்பு ; விசாரணையில் வெளியான காரணம்

மனைவிக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்பு ; விசாரணையில் வெளியான காரணம்

ஜப்பானில் வசிக்கும் நபர் ஒருவர் தனது மனைவிக்கு தினமும் 100 தடவைகள் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ளார். இதனால் பாரிய மன உளைச்சலுக்குள்ளான அவரின் மனைவி காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளதுடன் இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

இவர் தனது மனைவிக்கு தினமும் 100 முறை புதுப்புது தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பினை ஏற்படுத்தியிருந்ததுடன் இவரது மனைவி மறுபக்கத்தில் இருந்து அழைப்புக்களுக்கு பதில் கொடுத்து பேசினாலும் அவர் பேசாமல் அழைப்பைத் துண்டித்ததும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடளித்த குறித்த பெண் தனது கணவரின் நடவடிக்கைகளிலும் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மனைவிக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்பு ; விசாரணையில் வெளியான காரணம் | Hundredcallwifeeveryday Incident Viral Socialmedia

தனது கணவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது எந்தவித அழைப்புகளும் தனக்கு வரவில்லை என்றும் அதேபோல், அவர் வீட்டில் இருக்கும்போதும் அழைப்புகள் வந்தாலும், தன் கணவரின் தொலைபேசியைத் தான் உபயோகிக்கும்போதும் தனக்கு அழைப்புகள் எதுவும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண்ணின் கணவரை அழைத்து விசாரணை நடத்தியிருந்த காவல்துறையினர் குறித்த பெண்ணின் கணவரே இந்த அழைப்புகள் அனைத்தையும் மேற்கொண்டதனைக் கண்டறிந்துள்ளனர்.

இதன்போது வெவ்வேறு இலக்கங்களில் இருந்து தனது மனைவிக்கு தினமும் 100 ற்கும் மேற்பட்ட அழைப்புகளை மேற்கொண்டது தான் என்று அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் அவர் தன் மனைவியை அதிகமாகக் காதலிப்பதாகவும், இதன் காரணமாகவே தான் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பிரித்தானியாவினைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புக்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒரு வருடகாலம் சிறைத்தண்டனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.