சாரதியின் உறக்கத்தால் பறிபோன குழந்தையின் உயிர்

சாரதியின் உறக்கத்தால் பறிபோன குழந்தையின் உயிர்

பொலன்னறுவை- மஹியங்கனை வீதியில் லத்பந்துர சந்தி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்றரை வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதியின் உறக்கத்தால் பறிபோன குழந்தையின் உயிர் | Child S Life Lost Due To Driver S Sleep Accidentவேன் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூன்றரை வயதுடைய குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வேனின் சாரதியும் வேனில் பயணித்த இளைஞனும் காயமடைந்துள்ள நிலையில் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்