வெளிநாடொன்றில் நேருக்கு நேர் மோதிய இரண்டு தொடருந்துகள்: குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு
எகிப்தில் (Egypt) இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து நேற்றையதினம் (14) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷர்கியா மாகாணத்தின் தலைநகரான ஜகாசிக் (Jagasic) நகரில் இந்த விபத்து நடந்ததாக அந்நாட்டு தொடருந்து ஆணையம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
இந்த தொடருந்து மோதலில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளதாக எகிப்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், விபத்து தொடர்பாக வெளியான காணொளியில், காயமடைந்தவர்களை தொடருந்தின் ஜன்னல்களின் வழியாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.